News

நடிகையாகும் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா !

Published

on

நடிகை குஷ்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த பின்னர் 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இயக்குநர் சுந்தர் சி அவர்கள் இயக்கிய முறை மாமன் படத்தில் நடித்த போது இயக்குநர் சுந்தர் சி அவர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் அவந்திகா, அனந்திகா என இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா வயது 21 மிக விரைவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார் என குஷ்பு டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

அந்த பதிவில் குஷ்பு கூறியுள்ளதாவது :- என் மூத்த மகள் லண்டனில் உள்ள புகழ்பெற்ற நடிப்பு பயிற்சிப் பள்ளியில் தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். சொந்தமாக முயற்சி செய்ய வேண்டும் என அவர் எண்ணுவதால் அவருடைய போராட்டம் இனிமேல்தான் ஆரம்பிக்க போகிறது. அவரை நாங்கள் அறிமுகப்படுத்த மாட்டோம் யாரிடமும் பரிந்துரை செய்ய மாட்டோம் அவருக்கு உங்கள் வாழ்த்துக்கள் தேவை என கூறியுள்ளார்.

Trending

Exit mobile version