News
அயலான் ஏலியன் பொம்மை விலை 2 கோடி – தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ் !

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். மேலும் இப்படத்தில் ரகுல் பிரீத், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் 24.ஏ.எம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்தும் சுமார் 3 வருடங்களாக கிடப்பில் இருந்தது இந்த அயலான்.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ் அளித்துள்ள ஒரு பேட்டியில். அயலான் படத்தில் வரும் ஏலியன் பொம்மைக்காக சுமார் 2 கோடி செலவு செய்துள்ளோம். அதனுடைய அசைவு மட்டும்தான் கிராபிக்ஸ் செய்துள்ளோம். படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு அந்த ஏலியனையும் அழைத்து வருவோம் என கூறியுள்ளார்.
அயலான் திரைப்படம் ஈ.டி என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் அல்ல. இப்படத்தின் கதை முழுக்க முழுக்க வேறுபட்டு இருக்கும். இதற்கு முன்னர் இந்திய சினிமாவில் 4000 வி.எப்.எக்ஸ் நிறைந்த காட்சிகள் கொண்ட திரைப்படம் பிரமஸ்தரா. ஆனால் எங்களின் அயலான் திரைப்படம் அத விட அதிகம் சுமார் 4500 வி.எப்.எக்ஸ் காட்சிகள் உள்ளன என தெரிவித்தார்.