Connect with us
 

Reviews

அயோத்தி – விமர்சனம் !

Published

on

Movie Details

ஒன்லைன் ஸ்டோரி
அயோத்தியில் இருந்து ஒரு குடும்பம் ஆன்மிக பயணமாக வருகிறார்கள் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு நடக்கும் சம்பவத்தை திரைக்கதையில் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மந்திரமூர்த்தி படத்தின் கதாபாத்திரங்கள்.

கதையின் நாயகனாக வரும் சசிகுமார் வழக்கம் போல் தன பணியை நிறைவாக செய்து இருக்கிறார் அதேபோல காமெடி நடிகராக அறியப்படும் புகழ் இந்த படத்தில் குணச்சித்திர வேடத்திலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் படத்தின் பெரிய பிளஸ் என்றால் வடமாநிலத்தவராக நடித்திருக்கும் அப்பா மனைவி மகள் மகன் என அனைவருக்கும் எமோஷலான நடிப்பை கனகச்சிதமாக நடித்துள்ளார்கள் படத்தின் சில இடங்களில் அவர்களின் நடிப்பு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது அந்த அளவு எமோஷன் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார்கள். அதேபோல மற்ற காட்சிகளில் வரும் நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள்

படத்தின் கதை
படத்தின் தொடக்கத்தில் அயோத்தியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் நமக்கு அறிமுகம் ஆகிறார்கள்.   அந்த குடும்பத்தை ஒரு பழமைவாத, மதத் தலைவரான யஷ்பால் ஷர்மாவால் வழி நடத்துகிறார், அவர் தனது மனைவியை கொடூரமாக கையாள்வது மட்டும் இல்லாமல் இன்னும் பலவழிகளில் அவருக்கு தொல்லை தருகிறார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஒருவர் கல்லூரி செல்லும் பெண், ஷிவானி, ப்ரீத்தி அஸ்ரானி, மற்றும் ஒரு சிறுவன். இந்த குடும்பம் தீபாவளியன்று ராமேஸ்வரத்திற்கு ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவெடுக்கிறது, பயணம் விபரீதமாக மாறும் என்று தெரியாமல். இரண்டு குழந்தைகளின் தாயான ஜான்கி ஒரு விபத்தில் பலத்த காயங்களுக்கு ஆளாகிறார், மேலும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சசிகுமார், சம்பந்தப்பட்ட வண்டி ஓட்டுநரின் நண்பரான சசிகுமார், ஆதரவற்ற குடும்பத்திற்கு உதவ முடிவுசெய்கிறார்.

அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜான்கி இறந்ததும் விஷயம் வேறுதிசையை நோக்கி செல்கிறது போலீசார் உள்ளே வருகிறார்கள் எஞ்சிய கதையில், இரண்டு குழந்தைகளும் தங்கள் மிகுந்த மத நம்பிக்கையுடைய தந்தையின் கைகளில் படும் துன்பங்களையும், சசிகுமாரும் அவரது நண்பர் புகழும் எவ்வாறு தங்கள் தாயின் உடலை எல்லா வித பிரச்சனைகளில் இருந்து மீட்டு எடுத்து மீறி தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவுகிறார்கள் என்பதை மிதிக்கதையில் சிறப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மந்திரமூர்த்தி

படத்தின் விமர்சனம்
படத்தின் இயக்குநர் மந்திரா மூர்த்தியின் பெயருக்கு ஏற்றார் போல ரசிகர்களின் பல்சை நன்கு அறிந்து அதற்கு தகுந்தாற்போல படத்தை பார்க்கும் ரசிகர்களை எதோ மந்தரம் செய்து உள்ளார் என்று சொல்லலாம் அந்த அளவு அவரின் உழைப்பு சில இடங்களில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

அதேபோல வட மாநிலத்தில் இருந்து வரும் அந்த குடும்பம் , மற்றும் அவர்களின் பங்களிப்பு படத்திற்கு உயிரோட்டமாக அமைந்து உள்ளது ஆனால் சில இடங்களில் லாஜிக் மீறலால் நம்மை தொய்வடைய வைக்கிறது அதேபோல சசிகுமார் எல்லா படங்களிலும் தான் மற்றவருக்கு உதவத்தான் வந்துள்ளேன் என இந்த திரைப்படத்திலும் தனது நல்லவர் செய்யும் பணியை தொடர்கிறார் இசையமைப்பாளர் என்.டி.ரகுநந்தனின் பின்னணி இசை உணர்ச்சிக் காட்சிகளை வேறொரு நிலைக்கு எடுத்து செல்கிறது ஒளிப்பதிவாளரின் பங்களிப்பும் படத்திற்கு துணையாக நிற்கிறது.

மொத்தத்தில் அயோத்தி எனும் இந்த திரை காவியம் மக்களின் மனதில் அவ்வளவு எளிதில் அணையாத அயோத்(தியாக) ஒளிர்விடும் என நம்பலாம்
Ayothi Review By Kabali

[wp-review id=”45614″]

Continue Reading