News

20 வயது இளைஞருக்கு ஜோடியாக அனுஷ்கா !

Published

on

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா. பாகுபலி என்ற படத்தில் நடித்த பின்னர் மேலும் பிரபலமானார். பின்னர் ஒரு படத்திற்காக உடல் இடையை அதிகரித்தார். அதன் பின்னர் இவரால் உடல் இடையை குறைக்க முடியவில்லை இதன் காரணமாக சினிமா பட வாய்ப்புகள் குறைந்து போனது.

வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்து வந்த அவருக்கு சமூபத்தில் மீண்டும் எடை கூடியது. இதனால் புதிய படங்களில் நடிக்க அனுஷ்காவை யாரும் அணுகவில்லை.

முன்னணி கதாநாயகர்களும் அனுஷ்காவை ஜோடியாக்க மறுத்தனர். கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் சைலன்ஸ். 39 வயது ஆன அனுஷ்காவை நடிகர் பிரபாசுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்னர் தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெறவுள்ளது என்று செய்திகள் வெளியானது. இந்த தகவலை முற்றிலுமாக மறுத்தார் அனுஷ்கா.

இந்நிலையில் அனுஷ்கா 20 வயது இளைஞருக்கும் 40 வயது பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி தயாரகும் சர்சை படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக 20 வயது இளைஞராக தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version