ஒரு கட்டதில் அந்த நண்பன் வேலையாக வெளிநாடு செல்கிறார். ஜி.வி.பிரகாஷும் திவ்யாவும் தனியாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அந்த நெருக்கம் உடலுறவு கொள்ளும் அளவுக்கு செல்கிறது.
இதனால் திவ்யபாரதி கர்ப்படைகிறார் இது பிடிக்காத ஜி.வி பிராகஷ் அந்த கற்பத்தை கலைத்து விடும்படி சொல்கிறார்.இதை மறுக்கும் திவ்யபாரதி அவரின் அக்காவிடம் இதை சொல்ல திவ்யபாரதியின் அக்கா கணவர் வக்கீல் அவர் ஜி.வி.பிரகாஷ் மீது குடும்ப வன்முறை என அவர் மேல் வழக்கும் பதிவு செய்கிறார் அதன் பின்னர் என்ன ஆனது திவ்யபாரதுக்கு நீதி கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகி மேல் காதம் வரும் காட்சிகளை விட காம உணச்சி வரும் இடங்களே அதிகமாக இருக்கிறது.படம் முழுவதும் இரட்டை அர்த்தம், முத்தக்காட்சிகள், நெருக்கமான காட்சிகள் நெருடலான வசனங்கள் என நம்மை முகம் சுழிக்க வைக்கிறது.
இடைவேளை வரையில் படத்தில் காமம் இதை தவிர வேறு எதுவுமே இயக்குநர் செய்யவில்லை அதை மட்டுமே கொடுத்துள்ளார். திரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு பின்னர் ஜி.வி.பிரகாஷுக்கு எந்தவொரு படமும் ஓடவில்லை அதனால்தான் போல இந்த கதையில் நடித்துள்ளார்.
நடிகை திவ்யபாரதிக்கு இதுவே முதல் அறிமுக படம். அறிமுக படத்திலேயே இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க தனி துணிச்சல் வேண்டும். ஆனால் தனது கதாப்பாத்திரத்தில் மிகவும் அழுத்தமாக நடித்துள்ளார்.
திருமணத்துக்கு முன்னர் காதலனுடன் உடலுறவு தைரியமாக கொள்ள சம்மதிப்பவருக்கு அதை எதிர்க்க மட்டும் இல்லாதவர் போல நடிகை திவ்யபாரதி இருப்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
உண்மை என்னவென்றால் படத்தில் நல்ல காட்சியோ இல்லை நல்லது என்று சொல்ல ஒரு காட்சியே இல்லை.
Cinetimee
படத்தில் வரும் பாடல்கள் ஒன்று கூட மனதில் நிற்கவில்லை. ஒரு சில இடங்களில் பின்னணி இசை நம்மை கவனிக்க வைக்கிறது. படத்தில் தேவையற்ற காட்சிகள் என பல உள்ளது அதை எல்லாம் வெட்டி எறிந்திருக்கலாம் எடிட்டர் ஷான் லோகேஷ் 3 மணி நேரம் எதற்கு இந்த படத்திற்கு.
படம் முழுவதும் காமமும் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களுக்கும் அதிகமாக இருப்பதால் இன்றைய சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார் இயக்குநர்.
இந்த படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க முடியாது அதையும் மீறி யாரும் பார்த்தால் குறிப்பாக பெண்களை பெற்றவர்கள் தங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை வெளியூர்களுக்கு வேலைக்கு அனுப்பவே யோசிப்பார்கள்.