News
பீஸ்ட் படத்தின் 2-வது பாகம் வெளியாகும் – நெல்சன் திலீப்குமார் !

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன்பிகர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் 13-ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட்.
சுமார் ரூ.150 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.
இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் 2-வது பாகத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் எனவும் அதற்கு விஜய் சம்மதிக்க வேண்டும் எனவும் அதன் பின்னரே இது குறித்த முடிவுகளை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.