News

கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பீஸ்ட் நடிகை !

Published

on

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின்னர் சரியான வாய்ப்புகள் தமிழில் அமையாத காரணத்தால் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே கொரோனா முதல் தடுப்பூசி போட்டுவுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

இவருக்கு பீஸ்ட் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து பின்னர் சிகிச்சை பெற்றி அதிலிருந்து மீண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version