News
அதிநவீன கேமரா மூலம் பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்பு !

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர்களுடன் இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ் பலர் நடித்து வருகிறார்கள்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதுவரை இப்படத்திற்கு 4 கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.
இது குறித்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்காக அதிநவீன டில்சா ரிக் கேமராவை பயன்படுத்துவதாகவும் ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் மிகச் சிறப்பாக இருப்பதாகவும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.