Connect with us
 

Reviews

பீஸ்ட் திரைவிமர்சனம்

Published

on

கோ லமாவு கோகிலா, டாக்டர் என ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்த மிகப்பெரிய அதிஷ்டம் என்றால் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு. இவர்களின் கூட்டணி என்றதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூடியது அதுவும் விஜய்க்கு பூஜா ஹெக்டே என்றதும் அந்த எதிர்பார்க்கு மேலும் அதிகமானது அந்த எதிர்பார்ப்பினை இன்று வெளியான இப்படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்று பார்க்கலாம்.

Movie Details

ராஜஸ்தானில் ஒரு பயங்கரவாதி கூட்டம் நடத்தும் அதிரடி தாக்குதலை ரா அதிகாரியான விஜய் முறியடிக்கிறார். ஆனால் இந்த தாக்குதலில் குழந்தை ஒன்று பரிதாபமாக பலியாகிறது. இதனால் அதிர்ச்சியடையும் விஜய் ரா பணியை உதறிவிட்டு சென்னை வருகிறார்

சென்னையில் விடிவி கணேஷ் மியூசிக் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது பூஜாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. அதன்பின் காதல், அரபி குத்து பாடல் என ஜாலியாக படம் செல்கிறது. இந்த நிலையில் திடீரென சென்னையில் உள்ள மால் ஒன்று தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அந்த மாலில் விஜய், பூஜா, யோகி பாபு உள்ளிட்டோர் உள்ளனர்

மாலை ஹைஜாக் செய்த தீவிரவாதிகள் தங்கள் தலைவரை விடுதலை செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்க அந்த நிபந்தனைகளை வைத்துக்கொண்டு அரசியல்வாதிகளிடம் செல்வராகவன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த நிலையில் மற்றொரு புறம் தனி ஒரு ஆளாக பணயக் கைதிகளை காப்பாற்ற முடியும் செய்யும் விஜய் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் தான் படத்தின் மீதிக்கதை.

விஜய் இந்த படத்தில் சூப்பர் ஆகவே நடித்துள்ளார். அதிக வசனம் இல்லை என்றாலும் அவரது கண்களே பல வசனங்களை பேசுகிறது.படத்தின் டிரைலர் வெளியான போதே கிட்டத்தட்ட மொத்த கதையையும் சொல்லியிருந்தனர். அதே போல தான் படமும் அமைந்திருந்தது. பீஸ்ட் முதல் பாதி, இரண்டாம் பாதி என மொத்த படத்தையும் விஜய் தன் தோளில் சுமக்கிறார். அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் சாதாரண காட்சியை கூட வேற லெவல் காட்சியாக மாற்றுகிறது.

ஜோடியாக நடித்துள்ள பூஜா ஹெக்தே ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். இதைத்தாண்டி படத்தில் சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமே இல்லை.

விஜய்யின் இன்ட்ரோ சீனிலேயே ஸ்க்ரீன் முன் ஆடிக்கொண்டு இருந்த ரசிகர்கள் அமைதியாக சீட்டில் உட்கார்ந்து விட்டனர், அப்படி ஒரு சாதாரணமான இன்ட்ரோவாக விஜய்க்கு இருந்தது.
Cinetimee

சுற்றி 10 பேர் துப்பாக்கி வைத்து ஹீரோவை சுட்டாலும் பதிலுக்கு ஹீரோ சுடும் ஒரு புல்லட் வில்லனை சரியாக கொள்ளும் என்ற அரதப்பழசான லாஜிக்கே இல்லாத காட்சியை படம் முழுவதும் வைத்துள்ளார் நெல்சன். நெல்சனின் திரைக்கதையில் வில்லன் படு வீக்கான வில்லன் இருப்பது படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவரது வழக்கமான காமெடி இந்த படத்தில் இருப்பதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ரசிக்க முடிகிறது

பீஸ்ட் படத்தில் அவ்வளவு காமெடியன்கள் இருந்தும் சுத்தமாக எடுபடவில்லை. மால்லுக்குள் நடக்கும் காட்சிகள் எதிலுமே ஒரு சதவீதம் கூட லாஜிக் இல்லை. படம் முழுக்க வரும் செல்வராகவன் விஜய்க்கு பில்டப் மட்டுமே கொடுத்துள்ளார். ஒரு காட்சியில் கூட இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் படி இல்லை.

மேலும் அரசாங்கம் முடிவு எடுப்பது போல் காட்டப்படும் ஒவ்வொரு காட்சிகளும் இன்னும் ரசிக்கும் படி எடுத்திருக்கலாம் சுவாரசியமே இல்லாத ஒவ்வொரு காட்சியையும் பார்க்க வைப்பது அனிருத்தின் பிஜிஎம் தான். ஒவ்வொரு சீனிற்கும் கடுமையாக உழைத்துள்ளார். இதே உழைப்பை இயக்குனர் நெல்சன் கொஞ்சம் போட்டிருக்கலாம்.மிகப்பெரிய ஹிட்டடித்த அரபி குத்து பாடல் தேவையே இல்லாத இடத்தில் வருகிறது என்றால் ஜாலியோ ஜிம்கானா பாடல் படம் முடிந்த பின்பு வருகிறது.

இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது ஒளிப்பதிவுதான். ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஒரு பெரிய வாழ்த்துக்கள்.


மொத்தத்தில் பீஸ்ட் திரை தீ சரியாக பிடிக்கவில்லை.