News
ஏப்ரல் 12-ம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படம் !

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாகிறது.
வெளிநாட்டு விநியோக உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஐங்கரன் நிறுவனம் தமிழில் படங்களை தயாரித்து வந்த நிலையில் இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவுக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் ஏப்ரல் 12 ஆம் தேதியே படத்தின் ப்ரீமியர் ஷோ நடக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.