Connect with us
 

News

பாடலுடன் தொடங்கும் பீஸ்ட் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு !

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிக்கும் பீஸ்ட் திரைப்படம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

தளபதி பிறந்த நாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இரண்டு போஸ்டர்களும் வெளியானது. இந்த நிலையில்தான் இந்த படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் அதிரடி பாடலுக்கு நடனம் ஆடி பயிற்சி எடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. இதனையடுத்து நேற்று சென்னை வந்து இறங்கிய நடிகை பூஜா ஹெக்டேவின் புகைப்படமும் வைரலானது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமானது. பாடல் காட்சியை இன்று படமாக்க ஆரம்பித்தனர் படக்குழு தொடர்ந்து 6 நாட்கள் இந்த பாடல் ஷூட்டிங் நடக்கவுள்ளதாம்.மொத்தமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் சென்னையில் நடைக்கவுள்ளதாம் என்று கூறப்படுகிறது.