Connect with us
 

News

தங்கம் கடத்தும் கும்பளை வேட்டையாடும் பீஸ்ட் விஜய் !

Published

on

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் ஒப்பனிங் பாடலின் டீசர் வெளியாகவுள்ளதாகவும் அதற்காக படப்பிடிப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய்யின் ஓப்பனிங் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி விஜய் பாடியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படம் தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ளது என்றும் இப்படத்தில் விஜய் ராணுவ பயிற்சி பெற்ற கமாண்டோவாக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் நெல்சன் இயக்கிய முதல் படமான கோலமாவு கோகிலா போதைப்பொருள் கடத்தை மையமாகவும் இரண்டாவது படமான டாக்டர் திரைப்படம் குழந்தைகளை கடத்தி விற்கும் படமாகவும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.