News

பிக்பாஸ் புகழ் கவினின் லிப்ட் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியீடா படக்குழு விளக்கம் !

Published

on

பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின்.அதன் பின்னர் லிப்ட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படதில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட புகழ் அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இப்படத்தை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் வெளியீட்டு உரிமத்தை லிப்ரா தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வந்த நிலையில்தான் கொரோனா இரண்டாம் அலை வந்து லாக்டவும் போடப்பட்டு வெளியிட முடியமல் இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவளுக்கு லிப்ரா நிறுவன ரவீந்திரன் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது :- ஃலிப்ட் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியிட்டுக்கு தயாராகவுள்ளது. ஜூன் 20-ம் தேதிக்கு மேல் சூழ்நிலையை பார்த்துவிட்டு திரையரங்கில் வெளியிட கூடிய சூழல் இல்லை என்றால் மட்டுமே படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஆனால் ஃலிப்ட் திரைப்படம் முழுக்க முழுக்க தியேட்டருக்கான படம்தான் என்று கூறினார்.

Trending

Exit mobile version