News

தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் அனிதா சம்பத் !

Published

on

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனலில் பல வீடியோக்கள் பகிர்ந்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பின்னர் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதை நிறுத்தி விட்டார். இருப்பினும் விஜய் டீவியில் ஒரு சில நிகச்சியிகளில் கலந்து கொண்டுவருகிறார். விஜய் டீவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர்தான் இவரை சன் டீவி வேலையை விட்டு நீக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கலர்ஸ் டீவியில் ஒளிப்பராகும் சில்லுன்னு ஒரு காதம் தொடரில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க அனிதா சம்பத் ஒப்பந்தம் செய்யப்படுள்ளதாக கூறப்படுகிறது. இவர் வரும் அந்த குறிப்பிட்ட எபிசோட் அடுத்த வாரங்களில் ஒளிப்பரப்படும் என்று கூறப்படுகிறது. அதே போல விஜய் டீவியிலும் அவர் சீரியல் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version