News
பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் !

விஜய் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியான பிகில் படத்தில் நடித்தவர் காயத்ரி ரெட்டி. விஜய்யிடம் கால்பந்து பயிற்சி பெறும் வீராங்கனையாக நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தொடர்ந்து கவினின் லிப்ட் படத்திலும் நடித்து இருந்தார்.
அர்ஜுன் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்த நிலையில் காயத்ரி ரெட்டிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயத்ரிரெட்டி வெளியிட்டு உள்ளார். நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்ததாகவும் இது பெரியவர்களால் நிச்சயித்த திருமணம் என்றும் தனது வருங்கால கணவர் பற்றிய விவரங்களை திருமணம் நெருங்கும்போது தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். காயத்ரி ரெட்டிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.