Connect with us
 

News

நிர்வாணமாக நடிக்க தயார் – பிந்து மாதவி !

Published

on

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் என்று நடிகை பிந்து மாதவி கூறிவுள்ளார்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியான யாருக்கும் அஞ்சேல், சசிகுமாருடன் பகவனுக்கு அருள்வாய், மாயன் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார் பிந்து மாதவி.

தமிழ் சினிமாதான் முக்கியம் என்று நான் நடித்து வருகிறேன். எனது நடிப்பு பயணத்தில் சிறு இடைவெளி விழுந்தது உண்மைதான். அது நானாக ஏற்படுத்தியது கிடையாது. நல்ல கதைகள் அமையாமல் போனதுதான் காரணம். இப்போதுதான் சில வாய்ப்புகள் அமைந்து நான் விரும்பும் கேரக்டர்களும் எனக்கு வருகிறது.

நிர்வாணமாக நடிப்பது பற்றி கேட்கிறார்கள் யாரும் பணத்துக்காக அப்படி நிர்வாணமாக நடிப்பது கிடையாது. கதைக்கு தேவைப்படும் போது அது தவிர்க்க முடியாமல் போகிறது. எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கதைக்கு மிகவும் தேவைப்பட்டால் மட்டுமே அதுபோல் நிர்வாணமாக நடிப்பேன் என்று கூறினார்.

Continue Reading