News

தளபதி விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

Published

on

பல நடிகர்கள் நடிகைகள் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக பல மிரட்டல் தொலைபேசி வந்திருக்கும் தற்போது தமிழ் நடிகரான விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடப்பட்டுள்ளது.

தற்போது நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் சார்பாக அவரது ரசிகர்கள் சில பேர் சில வாரங்களுக்கு முன் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த வெற்றியை பிடிக்காத சில பேர்தான் இவ்வாறு செய்திருக்க வேண்டும் எனவும் அல்லது பொழுதுபோக்கிற்காக இவ்வாறு சில பேர் இருக்கிறார்கள் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி அவர்கள் சரியான நேரத்தில் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்று அங்கு அந்த வீட்டை முழுவதுமாக சோதனை செய்ததில் அங்கு ஒன்றும் கிடைக்காத நிலையில் காவலர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

மேலும் இந்த தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ் குமார் என தெரியவந்தது இவர் இதற்கு முன்பும் பல பிரபலங்கள் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Trending

Exit mobile version