News
அஜித்தின் வலிமை படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த போனி கபூர் !

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’ கடந்த மாதம் 13-ம் தேதி வெளியாகவிருந்த இந்த திரைப்படம் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்டு வரும் நிலையில் திரையரங்குகள் மட்டும் பிப்ரவரி 15-ம் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளது. அதன் பின்னர் 100 சதவீத இருக்கைகள் வர அதிக வாய்ப்புள்ளது. இதனால் தற்போது பல படங்கள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ‘வலிமை’ படத்தி பிப்ரவரி 24-ம் தேதி வெளியிடுவதாக போனி கபூர் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பின்னணி இசை யார் அமைத்தது என்ற மர்மம் தொடர்கிறது. அஜித்துடன் இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இவர்களுடன் நடிகை ஹூமா குரேஷி, சுமித்ரா, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.