News

ஆகஸ்டில் வெளியாகும் அருண் விஜய் நடித்த பார்டர் திரைப்படம்?

Published

on

குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்துள்ள படம் பார்டர். இப்படத்தில் அருண் விஜய்யுடன் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜயராகவேந்திரா தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் செய்வதற்கு தயாராகவிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் வெளியீடும் தள்ளி போனது.

இதற்கிடையில் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்துள்ளது. ஜூலை மாதத்தில் திரையரங்குகள் திறக்கபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பார்டர் படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை படக்குழு கைவிட்டத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதன்படி பார்டர் படத்தை ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version