Connect with us
 

News

அருண் விஜய்யின் பார்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அடுத்த மாதம் திரைப்படம் வெளியீடு !

Published

on

குற்றம் 23 படத்தை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் பார்டர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். அறிவழகன் – அருண் விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் இந்த பார்டர்.

இப்படத்தில் அருண் விஜய் அருண் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியீடு நேற்று மாலை பிரம்மாண்டமாக அறிவித்தனர். இப்படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா மற்றும் ஸ்டெஃபி பட்டேல் நடித்துள்ளனர்.

இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.