Connect with us
 

News

ரஜினி நடிக்கும் 169-வது படத்தின் பெயர் பாஸ்?

Published

on

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் 169-வது திரைப்படம்.

நெல்சன் இதற்கு முன்னர் கோலமாவு கோகிலா, டாக்டர், மற்றும் விஜய் நடித்து ஏப்ரல் 13-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யாயிடமும் நகைச்சுவை வேடத்துக்கு வடிவேவெவிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

ரஜினியின் 169-வது படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்திற்கு 5 பெயர்கள் தற்போது 5 பெயர்கள் பரிசீலனை செய்து இருப்பதாகவும் அந்த பட்டியலில் பாஸ் என்ற பெயரும் இருப்பதாக இணைய தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்கி பொங்கள் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.