Connect with us
 

News

பாகுபலி படத்தின் சாதனையை வலிமை படத்தால் முறியடிப்பு !

Published

on

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக காலா படத்தின் நாயகி பாலிவுட் நடிகையுமான ஹூமா குரேஷி நடிக்கின்றார். வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.

இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி சண்டைக்காட்சி மட்டுமே படமாக்கவுள்ளனர். இதனை அடுத்த மாதம் படப்பிடிக்கவுள்ளனர் படக்குழு. இருந்தாலும் இப்படத்தின் பர்ஸ்ட் கூட இன்னும் வெளியாகவில்லை அதை தவிர எந்த அப்டேட் இல்லை என்பதுதான் அஜித் ரசிகர்களின் வேதனை.

இந்த நிலையில்தான் வலிமை படம் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அதாவது வரவிருக்கும் படங்களுக்கு பிரபல ஆன் லைன் டிக்கெட் பதிவு செய்யும் தளமான புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் அதிக ஆர்வம் தெரித்த படமாக வலிமை படம் சாதனை படைத்துள்ளது. இது வரையில் 10 லட்சத்துக்கு மேலான ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் பாகுபலி 2 சாதனையை அஜித்தின் வலிமை படம் முறியடித்துள்ளது. இதையடுத்து வலிமை இந்திய அளவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.