News

ஒரு வழியாக வியாபாரம் ஆனது சிலம்பரசனின் ஈஸ்வரன் திரைப்படம் !

Published

on

இந்த வருடம் பொங்களுக்கு மாஸ்டர் படத்துடன் வெளியான திரைப்படம் சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் மிகவும் குறைந்த நாட்களில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையோடு வெளியானது. நீண்ட நாட்களுக்கு பின்னர் சிம்பு நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த சமயத்திலெயே படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நல்ல விலை வந்த போது படக்குழு அதை விட அதிகமான விலை சொன்ன காரணத்தால் விலை போகவில்லை.

படம் வெளியாகி சரியாக ஓடவில்லை என்ற காரணத்தால் தொலைக்காட்சி உரிமத்தை கேட்டு யாருமே வரவில்லையாம். இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமைத்தை தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதையடுத்து நாளை முதல் ஈஸ்வரன் படத்தி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version