Connect with us
 

News

நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது – வெற்றிமாறன் !

Published

on

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் சூரி விடுதலை படத்தை இயக்கி வருகிறார் வெற்றி மாறன். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. தற்போது இப்படம் இறுதிக்கட்ட பணியை நெருங்கி உள்ளது. இப்படத்தை முடித்த பின்னர் அடுத்ததாக சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை என்ற நிகச்சியில் கலந்து கொண்டார் வெற்றி மாறன்.

அதில் பேசிய வெற்றிமாறன் ‘ பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும். நான் எனது குழந்தைகளுக்கு சாதி இல்லை என்ற சான்றிதழ் வாங்க முயற்சி செய்தேன். ஆனால் தர முடியாது என கூறி விட்டார்கள். அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றபோதும் சாதி இல்லை என்ற சான்றிதல் கொடுக்க முடியாது. நீங்கள் சாதியை குறிப்பிட்டு ஆக வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள் என்று கூறினார். பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதல் கேட்பதை நிறுத்த வேண்டும். எனக்கு சாதி தேவையில்லை என்று நான் கருதுகிறேன் என கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய வெற்றிமாறன் நடிகர்களை தலைவர் என்று சொல்வது வருத்தமளிக்கிறது. முன்பு நடிகர்கள் அரசியலுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை அதனால் நடிகர்களை தலைவர் என்று அழைப்பது கொஞ்சம் நெருடலாக உள்ளது என கூறினார்.