Connect with us
 

News

மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் கேப்டன் விஜயகாந்த் !

Published

on

தமிழ் சினிமாவில் 80 முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவரின் பல திரைப்படங்கள் சாதனை படைத்தன. இவரின் நடிப்புக்கும் சண்டைக்காட்சிக்கும் இன்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இன்று வரையில் தன் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பசி என்று போன ஏழை எளிய மக்களுக்கு உதவும் கர்ணன் போல வாழ்ந்து வருகிறார்.

விஜயகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிப்பதை விட்டுவிட்டு தே.மு.தி.க.என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சாதனையும் படைத்தார்.

சமீப ஆண்டுகளாக விஜயகாந்தின் உடல் நிலை அவ்வளவு சரியாகவில்லை. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த் வெளி நாடுகளில் சென்று சிகிச்சையும் பெற்று வருகிறார்.

தற்போது இவர் நன்றாக குணமடைந்து வரும் நிலையில் மீண்டும் விஜயகாந்த் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன் இப்படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.