News
இளையராஜா சர்ச்சையில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு !

இளையராஜா அவதூறு குறித்த விவகாரத்தில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை காவல்துறை ஆணையருக்கு தேசிய எஸ்சி, எஸ்டி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமருடன் அம்பேத்கரை ஒப்பிட்டு இளையராஜா கருத்து தெரிவித்ததால் இதற்கு பல கட்சியினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திமுக உட்பட பல்வேறு கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கூறிய அவர்கள் செல்வாக்கும், புகழும் இருந்துவிட்டால் விட்டால் ஜாதி உயர்த்தி விடுமா என கேள்வி எழுப்பி இளையராஜாவை கடுமையான விமர்சனம் செய்தார்.இதுதொடர்பாக தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் சென்னை காவல்துறை ஆணையருக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.