News

தி கோட் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் தி கோட். விஜய்யுடன் இப்படத்தில் பிரசாந்த, பிரபு தேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு, ஸ்நேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பல உச்ச நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் வெளியான கோட் படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கோட் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் சுமார் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் கொண்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Trending

Exit mobile version