Connect with us
 

News

விஜய் இயக்கத்தில் உருவான தலைவி படத்தின் சென்சார் சான்றிதல் வெளியானது !

Published

on

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் தலைவி. இப்படத்தை பிரபல இயக்குனர் விஜய் இயக்கிவிருக்கிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

மேலும் அரவிந்த சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்துள்ளார். இவரின் இந்த கதாப்பாத்திரத்தை பார்த்து பலரும் பாராட்டி கொண்டாடினர். மூன்று மாதங்களுக்கு இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

வெளியீட்டு தயாராக இருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.

இந்நிலையில் தலைவி படத்தின் தமிழ் பதிப்பிற்கு சென்சார் அதிகாரிகள் யூ சான்றிதல் வழங்கியுள்ளனர்.விரைவில் தெலுங்கு மற்றும் ஹிந்தி பதிப்பின் சான்றிதல் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.