Connect with us
 

News

வலிமை படத்தில் 15 இடங்களில் கை வைத்த தனிக்கை குழு !

Published

on

இரண்டு வருடமாக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த திரைப்படம் வலிமை. இந்த மாதம் பொங்கள் தினத்தை முன்னிட்டு வெளியாகவிருந்த திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்ற அறிக்கை அறிவித்தது தமிழக அரசு இதன் காரணமாக வலிமை படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது படத்தின் சென்சார் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சென்சார் குழுவினர் இப்படத்திலிருந்து 15 இடங்களில் உள்ள காட்சிகளை நீக்கவும் ம்யூட் செய்யவும் தெரிவித்துள்ளதாம் அதன் விபரம் இதோ.

* படம் முடிந்த பின் வரும் டைட்டில் கார்டு ஆங்கிலந்தில் மட்டுமே உள்ளதாம் அதை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற வேண்டும்.
* விலங்குகள் சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத காட்சிகள் நீக்கப்பட வேண்டும்.
* தங்கசங்கிலி பறிப்பு நிகழ்வின் போது சாலையில் ஆட்டோவிலிருந்து குழந்தையுடன் ரோட்டில் விழும் பெண்ணின் காட்சி நீக்கப்பட வேண்டும்.
* போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகள் சில நீக்கப்பட வேண்டும் சில நீளம் குறைப்பட வேண்டும்.
* வக்காலி எனும் வார்த்தையை ம்யூட் செய்ய வேண்டும்
* சண்டை காட்சியில் கீழே விழும் நபரின் தலையில் பரவும் காட்சியை நீக்க வேண்டும்.
* ஒரு நபரை கத்தியால் குத்தும் காட்சி நீக்கப்பட வேண்டும்.
* கப்பலில் ஒரு நபரை கொல்லும் காட்சி நீக்கப்பட வேண்டும்.
* ….த்தா எனும் வார்த்தை வரும் காட்சிகளில் அந்த வார்த்தை நீக்கப்பட வேண்டும்.
* நடுவிரலை காட்டும் காட்சி நீக்கப்பட வேண்டும்.
* போலிசின் நெஞ்சில் கத்தியால் குத்தும் காட்சி நீக்கப்பட வேண்டும்.
* கட்டுமான பகுதியில் நடக்கும் சண்டைக்காட்சியின் நீளம் குறைக்கப்பட வேண்டும்.
* போதைப்பொரு பயன்படுத்தும் காட்சிகளில் டிஸ்க்லைமர் பெரிய எழுத்தில் போட வேண்டும்.
* போதை பொருள் உட்கொள்ளும் காட்சியை நீக்க வேண்டும்.
* கடவுள்தான் நிஜ சாத்தான் எனும் வார்த்தை நீக்கப்பட வேண்டும்.