Connect with us
 

Reviews

Chithirai Sevvaanam – Movie Review !

Published

on

யக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் ஸ்டண்ட் சிவா. இவர் தற்போது பல முன்னணி நடிகர்கள் படங்களில் ஸ்டன்ட் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார் அப்படி அவர் இயக்கி இன்று ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் சித்திரை செவ்வானம்.

Movie Details

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த அந்த சம்பவத்தை நாம் யாருமே என்றும் மறக்க மாட்டோம். அங்கு அவர்களுக்கு நடந்த கொடுமைகளைதான் படத்தின் முக்கிய கரு.

கிராமத்தில் விவசாயியாக இருக்கிறார் படத்தின் நாயகன் சமுத்திரக்கனி. அவரது மனைவி திடீரென இறந்து விட தன் மகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்கிறார். மகளான பூஜா கண்ணன் நடிகை சாய்பல்லவியின் உடன் பிறந்த தங்கை. இவர் பிளஸ் 2 படித்து முடித்து விட்டு மருத்துவ துறையில் படிப்பதற்கு நீட் தேர்வு எழுதுவதற்காக கோச்சிங் கிளாசில் சேர்கிறார்.

ஒரு நாள் பூஜா கண்ணன் காணாமல் போய்விட்டார் என்று அந்த ஹாஸ்டல் வார்டன் புகார் தெரிவிக்கிறார். இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரீமா கல்லிங்கல்.

மறு பக்கம் தன் மகளுக்கு என்ன நடந்தது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார் தந்தையான சமுத்திரக்கனி இறுதியில் காணாமல் போன பூஜா கிடைத்தாரா இல்லையா என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாகவும் பூஜா கண்ணனின் தந்தையாகவும் வரும் சமுத்திரக்கனி இந்த கதாப்பாத்திரத்திற்கு அழகாக பொருந்தியிருக்கிறார்.அதுவும் குறிப்பாக மிகவும் அப்பாவி போல தன்னை பல இடங்களில் இவர் காட்டிக்கொள்ள இவரின் நடிப்பு அசத்தல்.தொலைதந்து போல மகளை தேடி அலையும் தவிப்பு கவலை என அனைத்து இடத்திலும் இவரின் அனுபவ நடிப்பு தெரிகிறது.

சமுத்திரக்கனியின் மகளாக வரும் நடிகை பூஜா கண்ணன். தமிழ் சினிமாவிற்கு இவரின் அறிமுக படம் இது. நடிகை சாய் பல்லவின் தங்கை இவர். தனது முதல் படத்திலெயே சென்டிமென்ட் நடிப்பால் மனதில் பதிகிறார்.

தன் குளியலறையில் குளிப்பதை சக மாணவர்கள் வீடியோ எடுத்து பரப்பி விட்டதும் அவர்களை சந்தித்து பூஜா கண்ணன் கதறி அழும் காட்சியில் படம் பார்க்கும் அனைவருமே கண்கலங்குவார்கள்.
Cinetimee

பெண் போலீஸ் அதிகாரியாக வரும் ரீமா கல்லிங்கல். ஆண் போலீஸ் அதிகாரிகள் ஆயிரம் நபர்களுக்கு கச்சிதமாக போலீஸ் வேடம் பொருந்தும் ஆனால் பெண்களுக்கு ஒரு சிலருக்கு மட்டுமே போலீஸ் வேடம் அமையும் அந்த வேடத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகையாக இருக்கிறார் நடிகை ரீமா கல்லிங்கல். அனைத்து ஊர்களிலும் இவர் போன்ற ஒரு அதிகாரி இருந்தால் போதும்.

படத்தின் இசை மற்றும் பின்னணி இசை கதை நகரும் விதத்துக்கும் பின்னணி இசைக்கும் கொஞ்சம் கூட பொருத்தமில்லாமல் போகிறது என்பது சற்று வருத்தமாகவுள்ளாது சாம் சிஎஸ் அவர்களே.

த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர் பல லாஜிக் ஓட்டைகளை கவனிக்க தவறிவிட்டார் என்பதை இங்கு சொல்லியே ஆகவேண்டும் அதிலும் குறிப்பாக சமுதிரக்கனி ஒரு மூட்டையை எடுத்துக்கொண்டு போகும் போது அதை நேரிம் பார்க்கும் ரீமாவுக்கு கொஞ்சம் கூடவா சந்தேகம் வரவில்லை எப்படி என பல லாஜிக் மீறல் இருந்தாலும் ஒரு முறை ரசிக்கும் படமாகவே உள்ளது.


மொத்தத்தில் சித்திரை செவ்வானம் ஒரு முறை மட்டுமே ரசிக்கலாம்.