News

இயக்குனர் விஜய் எழுத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் சித்திரைச் செவ்வானம் !

Published

on

லாக்கப், க.பெ.ரணசிங்கம், மதில்’ ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது.

இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “சித்திரைச் செவ்வானம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், பிரவீன் KL படத்தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் K.G . வெங்கடேஷ் பணிப்புரிந்துள்ளனர்.

பிரபல இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். A.L அழகப்பன் மற்றும் P. மங்கையர்க்கரசி இனணந்து தயாரித்துள்ளனர்.பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர், “சித்திரைச் செவ்வானம்” திரைப்பட இயக்குநர் ஸ்டண்ட் சில்வா இப்படம் பற்றி கூறியதாவது:-

“இயக்குநர் விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார். அட்டகாசமாக இருந்தது. இந்தக் கதையை நீங்கள் இயக்குங்கள் நன்றாக இருக்கும் என்றார். எனக்கும் அந்தக்கதையை இயக்கலாம் என்று தோன்றியது.

உடனடியாக அந்த கதையை நிறைய மேம்படுத்தி, முழு திரைக்கதையாக மாற்றினோம். பின் சமுத்திரகனியிடம் இந்தக் கதையை சொன்னேன். சொன்ன மறுநொடியே ‘தம்பி சூப்பரா இருக்கு எப்ப ஷீட்டிங் போகலாம்’ என்று கேட்டார். அப்படி உருவானது தான் ‘சித்திரைச் செவ்வானம்’ திரைப்படம். நான் ஃபைட் மாஸ்டர் என்பதால் இது ஆக்சன் படம் என்று நினைத்து விடாதீர்கள், நெஞ்சை தொடுவது போன்ற உணர்வு பூர்வமான படம் தான் இது.

ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான அன்பான உறவு தான் கதை. சமூகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல், அதை அவர்கள் கடப்பது தான் கதை. இந்தப்படத்தின் முக்கியமான மகள் பாத்திரத்திற்கு நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சரியாக இருப்பார் என இயக்குநர் விஜய் கூறினார். எங்களுக்கும் அவர் பாத்திரத்தில் சரியாக பொருந்துவார் என தோன்றியது. மிக அற்புதமாக மகள் பாத்திரத்தை செய்து அசத்திவிட்டார். படத்தில் இன்னொரு முக்கியமான பாத்திரத்தை, கேரளாவில் புகழ்பெற்ற நடிகையான ரீமா கலிங்கல் செய்திருக்கிறார். நானும் இயக்குநர் விஜய்யும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறோம். நினைத்ததை விட மிக அழகான திரைப்படமாக வந்திருக்கிறது. தற்போது ZEE5 தளத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி வெளிவருகிறது. எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்க கூடிய படமாக இப்படம் இருக்கும். அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி’ என்றார்.

Trending

Exit mobile version