News

சியான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமின் 60-வது படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விக்ரமுடன் இவரின் மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கிறார். லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் படமாக இது உருவாகி வருகிறது.

விக்ரமுடன் நடிகைகள் சிம்ரன் மற்றும் வாணி போஜன் நடிக்கிறார்கள் மேலும் இவர்களுடன் நடிகர் பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் சியான் 60-வது படத்தின் அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டது. அந்த அறிவிப்பில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் டைட்டில் வருகிற 20-வது தேதி வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு.

Trending

Exit mobile version