News
சியான் 60 படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விக்ரம் !
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விக்ரம் தன் மகனான துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்து வரும் திரைப்படம் சியான்60. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டார்ஜிலிங்கில் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதில் துருவ் விக்ரம் நடிக்கும் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு முக்கியமான சில காட்சிகள் மட்டும் இந்தியா நேபாள எல்லையில் படமாக்கப்படவுள்ளதாம். அடுத்த 10 நாட்களில் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.
இப்படத்திற்க்கு தற்போது சியான் 60 என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி போன்ற முக்கிய அறிவிப்புக்களை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. துருவ் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடிக்க விக்ரம் இப்படத்தில் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதில் ஒன்று வில்லன் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இவர்களுடன் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.