News

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மாரடைப்பால் காலமானார் !

Published

on

பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோரா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது மனைவி மற்றும் மூத மகன் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் சிவசங்கர் மாஸ்டர் மட்டும் தீவிர கொரோனா பதிப்பால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிவசங்கர் மாஸ்டர் நேற்று இரவு 7.44 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

மன்வாசனை, திருடா திருடி, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். மகதீரா படத்தில் தீரதீர என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலம் தேசிய விருதையும் அதற்காக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version