Connect with us
 

News

வலிமை பட சினிமா கலை இயக்குநர் கே.கதிரை வாழ்த்திய சினிமா பிரபலங்கள் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குநராக புதிய இலக்கணம் படைத்து வருபவர் கே.கதிர்.சிங்கம், நேர்கோண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று, பெங்களூர் நாட்கள் போன்ற பல நூறு படங்களில் அவரது கலை இயக்கம் பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்தது. சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் இவரது கலை இயக்கம் கோர்ட் செட் அமைப்பு, கள்ளர் குடியிருப்புகள் மிகப்பெரும் கவனத்தை குவித்தது.ரசிகர்களின் பேரெதிர்பார்ப்பில் அடுத்து வெளியாகும் அஜீத்தின் வலிமை படத்திற்கும் இவரே கலை இயக்கம் செய்துள்ளார். கலை இயக்குநராக மட்டுமல்லாமல் படைப்பாளியாகவும் திகழ்ந்து வரும் இவர் புதிதாக திருமண மண்டபம் ஒன்றை துவங்கியுள்ளார்.

ஞாயிறன்று திருவள்ளூர் மாவட்டத்தில் வெங்கல் இடத்தில், PK PALACE திருமண மண்டபத்திற்கு, திரைப்பிரபலங்கள் நடிகர் சிவக்குமார், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, டைரக்டர்கள் ஹரி, ராதாமோகன், பி.எஸ்.மித்ரன், கலை இயக்குநர் தோட்டா தரணி, ஓவியர் சந்துரு, கலை இயக்குநர் மகி, கலை இயக்குநர் ஜே கே, கலை இயக்குநர் கலை, ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி சி ஶ்ரீராம், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநர் மருது, நடிகர் மனோபாலா, கலை இயக்குநர்கள் மோகன மகேந்திரன், ராஜீவன், ராகவன், பிரபாகர், மணிராஜ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் உட்பட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். இவ்விழாவில் நடிகர் சிவக்குமார் வரைந்த ஓவிய புத்தகத்தை வழங்கி கலை இயக்குநர் கதிரை பாராட்டி வாழ்த்தி பேசினார்.

நடிகர் சிவக்குமார் வாழ்த்தி பேசியதாவது :- இவனை என் மகனாகவே நினைக்கிறேன். இவன் என் துறையில் இருக்கிறான். நான் 1958 லிருந்து 1962 காலம் வரையிலும் இந்தியா முழுதும் சுற்றி வரைந்த ஓவியங்களை இவனுக்கு புத்தகமாக அளிக்கிறேன். இந்த புத்தகம் உருவான காலத்தில் இவன் பிறந்திருக்கவே மாட்டான். சாப்பாட்டுக்கு வழியில்லாத காலத்தில் கலையின் மீதான ஆர்வத்தில் பேனா நண்பர்கள் குழு மூலம் காஞ்சிவரத்தில் நண்பர் வீட்டில் 4 நாட்கள் தங்கி வரதராஜ பெருமாள் கோவிலை வரைந்தேன். எல் ஐ சி பில்டிங்கை வரைந்தது 61 ஆம் ஆண்டு. இப்போது இதெல்லாம் பொக்கிஷம் இன்னும் பல புத்தகங்கள் இவனுக்கு அளிக்கிறேன். இவன் கலைக்கு இது உதவும்.இயக்குநர் த செ ஞானவேல் வந்திருக்கிறார் இந்த பசங்க தான் ஜெய்பீம் எனும் அற்புத படைப்பை தந்திருக்கிறார்கள். இவர்கள் அவரவர் துறையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் நன்றி.