News

D43 படத்த்லிருந்து இயக்குநர் விலகல்?

Published

on

தி கிரே மேன் ஹாலிவுட் படப்பிடிப்பை முடித்த தனுஷ் தற்போது இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷின் 43-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநருக்கும் தனுஷுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இயக்குநர் கார்த்திக் நரேன் இப்படத்திலிருந்து விலகிவிட்டார்.தற்போது இப்படத்தை தனுஷ் இயக்கி வருவதாகவும் அவருக்கு உறுதுணையாக சுப்பரமணிய சிவா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இது தொடர்பாக விசாரித்த போது முற்றிலும் வதந்தி என்றும் தனுஷ் மற்றும் இயக்குநர் கார்த்திக் நரேன் இருவருக்கும் இடையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும். இப்படத்தை கார்த்திக் நரேன் அவர்கள்தான் இயக்கி வருகிறார் என்று தெரிவித்தது தயாரிப்பு நிறுவனம்.

Trending

Exit mobile version