News

ஷாலு ஷம்மு ஜபோனை திருடிய நெருங்கிய நண்பர்கள் !

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். இதனாலேயே இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் தன் ஜபோன் திருட்டு போய்விட்டதாக போலீஸ் நிலையத்தில் ஷாலி ஷம்மு புகார் அளித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் கொடுத்து அந்த ஜபோனை வாங்கியதாகவும் எம்.ஆர்.சி நகரில் உள்ள ஓட்டலில் நடந்த விருந்தில் நண்பர்களுடன் பங்கேற்று விட்டு இரவு தோழி வீட்டில் தங்கியதாகவும் மறு நாள் என் ஜபோனை காணவில்லை என்றும் நண்பர்கள் மீது சந்தேகம் உள்ளது என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் ஹாலு ஷம்மு தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜபோனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘என் ஜபோன் கிடைத்துவிட்டது. எனது வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் காணமல் போன என் ஜபோன் இருந்ததை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் யார் மீது சந்தேகப்பட்டனே அவர்தான் என் ஜபோனை திருடி உள்ளார். 8 வருட நட்பு வீணாகி விட்டது. யாரை நம்புவது என்று தெரியவில்லை. இனி யாரையும் நம்பமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version