டிமாண்டி காலனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான அஜய் ஞானமுத்து அப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தை தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் Cobra.
படத்தின் ஆரம்பத்தில் பல வெளி நாடுகளை காட்டுகிறார்கள், ஸ்காட்லாந்து, லண்டன், அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகள் அதன் பின்னர் ஸ்காட்லாந்து இளவரசனை பாதிரியார் வேடம் போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து செல்கிறார் விக்ரம். இந்த கொலையை இண்டர்போல் அதிகாரியான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
ஸ்காட்லாந்து நாட்டு இளவரசர் கொலை செய்யப்பட்டது போலா ஒரிசா முதல்வர் ஒருவரும் இந்தியாவில் கொலை செய்யப்படுகிறார். இரண்டு கொலைகளுக்கு உள்ள ஒரு ஒற்றுமை கணிதம் என்று இந்தி மாணவியான மீனாட்சி கோவிந்தராஜன் கண்டுபிடித்த ஆராய்சிகளை மின்னல் மூலம் இண்டர்போல் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறார். பின்னர் தன் விசாரனையை இந்தியாவிலிருந்து ஆரம்பிக்கிறார் இர்பான் பதான். ஆனாலும் விக்ரம் ரஷ்யாவில் ஒரு கொலையையும் செய்கிறார். இத்தனை கொலைகளையும் விக்ரம்தான் செய்கிறார் ஆனால் இவர் செய்யும் அனைத்து கொலைகளுக்கும் பின்னணியில் இருப்பவர் 22 வயதான கார்ப்பரேட் கம்பெனி முதலாளி ரோஷன் மாத்யூ. அதே சமயம் விக்ரம் செய்யும் இந்த கொலைகள் அனைத்தும் யாரோ ஒருவர் கண்டு பிடித்து இர்பான் பதானிடம் சில ஆதாரங்களையும் கொடுக்கிறார். இந்த கொலையாளிகளை இர்பான் பதான் கண்டு பிடித்தாரா இல்லையா விக்ரமை போலீஸ் அதிகாரிகளிடம் சிக்க வைக்க துடிக்கும் நபர் யார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
விக்ரம் என்ற ஒரு நடிகனின் திறமையை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் அஜய்ஞானமுத்து. அந்த நம்பிக்கையை கொஞ்சம் கூட வீணாக்காமல் விதவிதமான பல தோற்றங்களாலும் தரமான நடிப்பாலும் பல காட்சிகளில் கைதட்டல் வாங்குகிறார் விக்ரம்.
படத்தின் ஆரம்பக்காட்சிலேயே கிறிஸ்துவ பாதிரியார் போல அடையாளமே தெரியாத அளவிற்கு அசத்தலாக அறிமுகமாகும் காட்சி விக்ரம் அரங்கை அதிர வைக்கிறார். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் போலீஸ் விக்ரமை விராரிக்கும் காட்சியில் விக்ரம் மற்றும் ஆனந்தராஜ் அட்டகாசம் திரையரங்குகளில் அப்லாஸ் வாங்குகிறார்கள். அன்னியன் படத்தில் பிரகாஷ்ராஹ் உடனாக காட்சி போல இருந்தாலும் அருமை.
படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸ் என்றால் இடைவேலை காட்சிக்கு பின்னர் வரும் இரண்டாம் விக்ரம். இவர் வந்த பின்னர் நமக்கு பல குழப்பங்கள் வருகிறது. அந்த குழப்பத்தை படத்தின் இறுதி நிமிடம் வரை நீடித்து கொண்டு வருகிறார் இயக்குநர்.
தமிழ் சினிமாவின் மிக திறமையான நடிகன் விக்ரமை வைத்து ஒரு மிகப்பெரிய வெற்றி படம் கொடுக்க நினைத்த இயக்குநர். அதை சாமானிய ரசிகர்களுக்கு புரியும் படி கொடுக்க வேண்டும் என்று ஏன் நினைக்கவில்லை என்று தோன்றுகிறது. இயக்குநரின் நம்பிக்கையை விக்ரம் விக்ரம் எந்த விதத்திலும் கெடுக்க வில்லை ஆனால் இயக்குநர் சில இடங்களில் அதை செய்து விட்டார். குறிப்பாக படத்தின் ஓடும் நேரம் அதை இரண்டரை மணி நேரமாக குறைத்து இருக்கலாம்.
கே.ஜி.எப் புகழ் ஶ்ரீநிதி விக்ரமை ஒரு தலையாக காதலிக்கும் வழக்கமான நடிகை வேடம். பெரிதாக சொல்லும் அளவிற்கு அமையவில்லை இவரின் முதல் தமிழ் படம். இர்பான் பதானுக்கு உதவி செய்யும் ஆராய்ச்சி மாணவியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் படத்தின் நாயகியை விட அதிக காட்சிகளில் வருகிறார்.
விக்ரமின் இளம் வயது காதலியாக வரும் மிருணாளினி ரவி இன்டர்போல் அதிகாரியாக வரும் இர்பான் பதான் சிறப்பான ஒரு அறிமுகம் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அருமையான நடிப்பு.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்றும் பின்னணி இசை ஏமாற்றம். ஹரிஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு சண்டைப்பயிற்யாளர் திலீப் சுப்பராயன், ஹாலிவுட் படங்களை கண் முன் கொண்டு வருகிறது. குறிப்பாக படத்தில் ஏனி மேல் வரும் சண்டைக்காட்சி.
கணிதம், அறிவியல், ஆள் மாறாட்டம், கார்ப்பரேட் அரசியல் இதில் இதையாவது ஒன்றை சொல்லிருக்கலாம் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இவை அனைத்தையும் ஒரே படத்தில் வைத்து அதை மிகவும் குழப்பத்துடனும் கொடுத்து ரசிகர்களை என்ன கதை என்று கேட்கும் அளவிற்கு அமைந்து விட்டது படம் இனை அனைத்தையும் பார்க்காமல் 56 வயதிலும் இப்படி ஒரு படத்தை விக்ரம் நடித்துள்ளார் என்று பார்த்தால் ஒரு கமர்சியல் படமாக நன்றாக ரசிக்கலாம்.
Cobra Review By Cine Timee
[wp-review id=”43799″]