News

கோமாளி பட நடிகை சம்யுத்தா ஹெக்டே கொரோனா தொற்றால் பாதிப்பு !

Published

on

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் பல நடிகர்கள் – நடிகைகள் இயக்குனர்கள் என பல திரைப்பட பிரபலங்கள் சிக்கி வருகிறார்கள். இந்த வகையில் கோமாளி திரைப்படதின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானர் நடிகை சம்யுத்தா ஹெக்டே இவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சம்யுக்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளாது. இதனையடுத்து இவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த மாதம்தான் இவரின் தாய்-தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

சம்யுக்தா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நண்பர்களே. நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது நான் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன்.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி அனைத்து நெறிமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறேன். உங்களை கவனித்துக்கொள்ளுங்கள். எனது பெற்றோர் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் ஆரோக்கியத்தோடு திரும்பியதற்காக பிரபஞ்சத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version