News
காமெடி நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் காலமானார் !

தமிழ் திரைப்படத்தில் காமெடி நடிகராக வலம் வந்த லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள அல்லிநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தனசேகரன் என்கிற லிட்டில் ஜான். மூன்றரை அடி உயரம் கொண்ட இவர், ஐம்புலன், வெங்காயம் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.
மேலும், கோயில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்துள்ளார். நேற்று இரவு பள்ளிபாளையம் அருகே உள்ள மோடமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு வந்து தனது வீட்டில் தூங்கியவர் மீண்டும் எழுந்திருக்கவில்லை.
உறவினர்கள் சென்று பார்த்தபோது மூக்கிலும், வாயிலும் ரத்தம் வந்த நிலையில் இருந்ததால், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு சக நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.