Connect with us
 

News

ஷங்கர்- ராம் சரண் படத்தில் இணையும் இசையமைப்பாளர் எஸ்.தமன் !

Published

on

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர். தற்போது இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர்கள் இவர் எங்களின் இப்படத்தை முடித்து கொடுக்காமல் வேறு எந்தவொரு படத்தையும் இயக்கக்கூடாது என்று அந்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

தற்போது தெலுங்கு படத்தின் வேலைகளை ஆரம்பிக்க தொடங்கியுள்ளார் ஷங்கர். இப்படத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளார்.இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ என்பவர் தயரிக்கவுள்ளார். இது தில் ராஜுவுக்கு 50-வது படமாகும். இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார் தில் ராஜு. இயக்குநர் ராஜமெளி இயக்கும் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பின்னர் ராம் சரண் நடிக்கும் படம் என்ற காரணத்தால். இப்படத்தின் வியாபாரமும் மிக பிரம்மாண்டமாகவெ இருக்கும்.

இப்படத்தில் இசையமைப்பாளராக ராக் ஸ்டார் அனிருத் வருவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இயைசமைக்கவுள்ளார் என்ற பேச்சு டோலிவுட் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்படுகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் 5 நாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் எஸ்.தமன். அதன் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர இசையமைப்பாளராக மாறி விட்டு பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் பெரிய அளவில் சாதிக்கவில்லையென்றாலும் தமன் தெலுங்கு சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.