News

தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள் தனுஷின் டுவிட்டர் பதிவு !

Published

on

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த மாதம் இவர்கள் இருவரும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பிரிந்த் செல்கிறோம் என்று தங்களின் சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் பலர் கூறினாலும் பிரிவுக்கான முறையான காரணம் இதுதான் என்று கூறப்படவே இல்லை. இருவரும் கணவன் – மனைவியாக பிரிந்தாலும் நல்ல நண்பர்களாக தொடர்வோம் என்று இவர்களின் பிரிவு அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி ‘ ஆல்பம் பாடலை பகிர்ந்த தனுஷ் தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கித் திவாரி இசையமைத்துள்ள இந்தப் பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார்.

Trending

Exit mobile version