News

ஹீரோவாக களமிறங்கும் குக் வித் கோமாளி புகழ் !

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கோமாளியாக வந்து அனைவரையும் கவர்ந்த ஒரு கோமாளி புகழ். இந்த புகழ் இவரை சினிமாவில் காமெடியனாக சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது சமீபத்தில் வெளியான வலிமை படத்திலும் புகழ் நடித்திருந்தார்.

இந்த நிலையில் புகழ் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருவதாகவும். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பிலிம்பைன்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் புகழுடன் நிஜமான ஒரு புலியும் நடிப்பதாகவும் அதற்கான பயிற்சியை எடுத்துக்கொள்ளருப்பதாகவும் கூறியுள்ளார். ஜே.சுரேஷ் என்பவர் இப்படத்தை இயக்க யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Trending

Exit mobile version