Connect with us
 

News

பிரபல மலையாள நடிகர் ஜெயராமுக்கு கொரோனா !

Published

on

கொரோனா வைரஸ் தொற்றானது அனைத்து மக்களுக்கும் பரவி கொண்டிருக்கிறது தற்போது இந்த வைரஸ் தொற்று பிரபல சினிமா நடிகர்களுக்கும் வேகமாக பரவுகிறது.

இந்த வரிசையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ் முன்னணி நடிகரான வடிவேலு, சத்யராஜ், அருண் விஜய், கமல் ஹாசன், மற்றும் திரிஷா போன்ற திரை பிரபலங்களை தாக்கி வருகிறது.

மேலும் அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருக்கிறார்கள் இந்த வரிசையில் தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற திரை உலகின் நடிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

அந்த வரிசையில் இருதினங்களுக்கு முன் நடிகர் மம்முட்டிக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது இன்று பிரபல முன்னணி நடிகரான ஜெயக்குமார் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- எனக்கு கடந்த 2 நாட்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என்று கூறியுள்ளார்.