News

முன்னாள் மனைவி மோனிகாவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த இமான் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான்.

கடந்த டிசம்பர் மாதம் தானும் தன் மனைவி மோனிகா ரிச்சர்டும் விவாகரத்து செய்து கொண்டுள்ளதாக அறிவித்தார். எங்களின் இந்த தனிப்பட்ட விவகாரத்தை ஊடகங்கள், ரசிகர்கள் எங்களின் குடும்பத்தினர் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இருவரும் விவாகரத்து செய்தாலும் இமான் தன் குழந்தைகளை சந்திக்க அனுமதி அளித்திருந்தது குடும்ப நல நீதிமன்றம்.

இந்த நிலையில் குழந்தைகளின் பாஸ்போர்ட்களை இமானிடமே இருந்தது. ஆனால் முன்னாள் மனைவி மோனிகா குழந்தைகளின் பாஸ்ட்போர்ட் தொலைந்து விட்டதாக கூறி புதிய பாஸ்ட்போர்ட் பெற்றுள்ளார்.

தன்னிடம் இருந்து தன் குழந்தைகளை பிரித்து வெளி நாட்டுக்கு அனுப்பி தன்னை பார்க்க விடாமல் செய்ய சதி திட்டம் நோக்கத்தில்தான் இப்படி செய்துள்ளார் இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி சென்னை நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Trending

Exit mobile version