News

விரைவில் தனுஷ் நடிக்கும் 43 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

Published

on

அந்தோணி மற்றும் ஜோ ரூசோ ஆகியோரின் ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பை முடித்தவுடன் தனுஷ் கர்திக் நரேனின் D43 படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்று நாங்கள் முன்பு தெரிவித்தோம்.

தனுஷ் தற்போது அமெரிக்காவில் படப்பிடிப்புற்காக அங்கு இருக்கிரார். இந்த நிலையில் இயக்குனர் கார்திக் நரேன் விரைவில் D43 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கஇருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரசிகர்களுடனான சமூக ஊடக கலந்துரையாடலில் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது பிடித்தவை மற்றும் அவரது படங்கள் தொடர்பான பிற ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சமீபத்தில் நடித்த நடிகர் மகேந்திரனுக்கு D43 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று கர்திக் நரேனை கேள்வி எழுப்பினார்.இப்படத்தில் மகேந்திரனும் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பதுடன் அவரது காட்சிகள் இன்னும் தொடங்கவில்லை.

அதற்கு பதிலளித்த கார்த்திக் நரேன் D43 படப்பிடிப்பை விரைவில் தொடங்கஇருப்பதாக கூறினார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது.

இயக்குனர் கார்த்திக் நரேன் தற்போது மலையாள இரட்டையர்களான இயக்குனர்கள் ஷர்ஃபு மற்றும் சுஹாஸை படத்தின் திரைக்கதை எழுதுவதில் பணியாற்ற இணைத்துள்ளார்.

Trending

Exit mobile version