News
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மாநாடு படத்தின் வசூல் !
இயக்குநர் வெங்கட்ப்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாநாடு. பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் பல போராட்டங்களுக்கு பின்னரே இந்த படம் திரைக்கு வந்தது.
மாநாடு படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் ரூபாய் 14 கோடி என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் முதல் நாள் என்ன வசூல் செய்ததோ அதே போல மூன்றாம் நாளான இன்றும் வசூல் செய்து வசூல் சாதனை படைத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மாநாடு படத்தின் முதல் 3 நாட்களின் வசூல் ரூபாய்.22 கோடி எனவும் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதல் 8 கோடியும் இரண்டாவது நாள் 6 கோடியும் வசூல் செய்திருந்தது. தற்போது மூன்றாம் நாளான இன்று முதல் நாளை விட 2 கோடி ரூபாய் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் இது தனக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மிக விரைவில் மாநாடு திரைப்படம் ரூ.100 கோடியை எட்டும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாவில் டைம் லூப் எனப்படும் மிகவும் குழப்பமான ஒரு கதைதை மிக அழகான திரைக்கதை அமைத்ததே இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.