எந்த அளவு தைரியமான மனிதனாக இருந்தாலும் இறப்பு என்றால் ஒருவித பயம் வந்து விடும் அப்படிப்பட்ட இறப்புடன் நாம் பேசினால் எப்படி இருக்கும் என்ற வித்தியாசமான முயற்றிதான் இந்த டியர் டெத் திரைப்படம்.
உருக உருக காதலித்து திருமணம் செய்து கொள்ளும் வசந்த் மற்றும் பிரியா ஜோடி. அப்போது கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைகிறார் பிரியா.
இன்னோரு புறம் வயதான காலத்திலும் படுத்த படுக்கையாக இருக்கும் தனது தாயை பொறுப்புடன் கவனித்து வரும் வெங்கடேசனின் தாயும் மரணமடைகிறார்.
மறுபுறம் திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத முத்தமிழ் – ஜூவிலி ஜோடிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது அந்த குழந்தையும் காலாவதியான குளிர்பானத்தை குடித்து மரணம் அடைகிறது.
மற்றுமொரு இடத்தில் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக பழகி பெரியவர்களான நான்கு பேரில் ஒருவருக்கு கிட்னி பழுதாகி இறந்து போகிறார்.
இப்பிடி நான்கு விதமான மரண கதையும் எப்படி ஒரே புள்ளியில் வந்து சந்திக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிகர் சந்தோஷ் பிரதாப் மரணத்தை எப்படி நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறும் இறப்பு என்கிற ஒரு கதாப்பாத்திரத்தில் வித்தியாசமாக வருகிறார். இவர் மரணத்தை பற்றி கொடுக்கும் விளக்கங்கள் எல்லாம் கண்டிப்பாக நம்மை சிந்திக்க வைக்கிறது.
வயதான தன் தாய்யை கவனித்து கொள்ளும் முதியவராக வரும் கதாப்பாத்திரம் கல் மனதையும் கலங்க வைக்கிறது.
குழந்தை இல்லாத ஏக்கத்தை விரக்தியையும் முத்தமிழ் – ஜூவிலி ஆர்த்தி இருவரின் இயல்பான நடிப்பால் நம்மை உருக வைக்கிறார்கள்.
நண்பர்களாக வரும் சதீஷ் நாகராஜன், மணி, ராகேஷ் கார்த்திக், மிதுன் ருத்ரன் ஆகியோ மிகவும் இயல்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளனர்.
மனைவியின் உடலை பார்த்து கதறும் போது ஜெய்யின் நடிப்பில் மன நிறைவு. மரணமே நம்முடன் பேசுவதாக கதை திரைக்கதை அமைத்து புதிய கோணத்தில் சுவாரஸ்சியமாக சொன்னது ரசிக்க வைக்கிறது.
நவீன் அண்ணாமலையின் பின்னணி இசை, அசோக் சுவாமி நாதனின் ஒளிப்பதிப்பு படத்திற்கு பலமாகவே அமைந்துள்ளது.
பல இடங்களில் படத்தின் காட்சிகள் நம்பும் தன்மை இல்லாமலும் நாடகதன்மையுடன் நகர்ந்தது சலிப்பு. இப்படிப்பட்ட படத்துக்கு கமர்ஷியல் காட்சிகளை சேர்த்தால் படத்தின் கதையே மாறி விடும் என்பதால் கதையின் போக்கிலே காட்சிகளை நகர்த்தி இருப்பது பாராட்டுகள் இயக்குநர் பிரேம்குமார்.
Dear Death Review By CineTime
[wp-review id=”44941″]