News

தமிழ் படத்தில் அறிமுகமாகும் சென்னை அணி வீரரின் தங்கை !

Published

on

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பு மட்டுமில்லாமல் படத்தை விநியோகம் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வரிசையில் ராக்கி மற்றும் கூழாங்கள் போன்ற தரமான படங்களை வாங்கி வெளியிடவுள்ளது.

நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படை தயாரித்தை தொடர்ந்து தற்போது ஊர்க்குருவி என்ற ஒரு புதிய படத்தையும் தயாரித்து வருகிறது.

இது மட்டுமில்லாமல் பிரபல பிண்ணனி பாடகியான ஜொனிதா காந்தி கதாநாயகியாக நடித்து வரும் வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி என்ற படத்தையும் தயாரித்து வருகிறது. இப்படத்தை விநாயக் என்ற புதுமுக இயக்குநர் இயக்கிவருகிறார். கிருஷ்ணகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சஷாரின் தங்கை மால்தி சஹார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Trending

Exit mobile version