Connect with us
 

News

டெலிவரி செய்த உணவில் கரப்பான் பூச்சியும் சேர்த்து டெலிவரி நிவேதா பெத்துராஜ் புகார் !

Published

on

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் வெளியான ஒருநாள் கூத்து படம் மூலம் நாயகியாக அறிமுகமானாவர். அதன் பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரின் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல், போன்ற படங்கள் உள்ளன தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சில நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளா ஒரு பதிவு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ஸ்விகி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்தேன். அங்கிருந்து எனக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார் நிவேதா பெத்துராஜ் இதற்கு ஆதாரமாக அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இது போன்ற கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது முதல் முறையல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.